காத்தான்குடி பிரதான வீதியில் பேரீச்சம் பழங்கள் அறுவடை
2014-06-25 21:07:52
காத்தான்குடியில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியோரத்தில்
நடப்பட்டுள்ள பேரீச்சை மரங்களிலிருந்து பேரீச்சை அறுவடை செய்யும்
நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விசேட
திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின்
தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு நாடுகள் போன்று
மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 70 பேரீத்த
மரங்கள் நடப்பட்டு, காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இம்மரங்களில் காய்த்துப் பழுத்துள்ள பேரீச்சைப் பழங்களை அறுவடையின்
ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு
முன்பாக இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு
முன்பாக இடம்பெற்றது.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர்
அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, சவூதி அரேபிய நாட்டு
பிரமுகர்கள் ஆகியோர் அறுவடை செய்தனர்.
இந்த பேரித்தம் பழங்ளை அறுவடை செய்யும் நிகழ்வில் பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின்,
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அந்தரங்கச்; செயலாளர் எம்.ஐ.நாஸர்
உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான
பேரீச்சைப் பழங்களை அறுவடை செய்ய முடிந்துள்ளதாக பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment